சீருடை கிடைக்காத 18 லட்ச அங்கன்வாடி குழந்தைகள் !!
kids from anganwadi across tamilnadu did not receive dresses
தமிழகத்தில் உள்ள மாநிலத்தில் அங்கன்வாடி மையங்கள் கடந்த ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்பட்டு தற்போது கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும், இந்த மையங்களில் உள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் புதிய சீருடை வழங்கப்படவில்லை. இது சீருடை தொடர்பாக சமூக நலத்துறை சமீபத்தில் டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு சீருடைகள் வந்து சேர இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கும் பணியை, கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு துவக்கியது. மேலும் அந்த திட்டம் விரிவாகப்பட்டு கடந்த ஆண்டு, மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு சீருடை வழங்க முடிவு செய்தது. ரெடிமேட் வண்ண சீருடைகளின் விலை ஒரு செட்டுக்கு ரூ. 150 என நிர்ணயிக்கப்பட்டது அவை ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு ஜோடி துணிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/anganwadi ts-t3ath.jpg)
தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிட்ட உடன் சீருடை தரம் உயர்ந்துள்ளதாக அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் ஏழைப் பொருளாதாரப் பின்னணியில் உள்ள வார்டுகளில் பெற்றோர்களும், இந்த சீருடை தனியார் முன்பள்ளிகளைப் போல இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிதி ஆண்டில் சுமார் ரூ.27 கோடி செலவில் மொத்தம் 18.6 லட்சம் குழந்தைகளுக்கு சீருடை வழங்க அரசு துறை முடிவு செய்தது. தற்போது, வினியோகம் தாமதமாகி வருவது பெற்றோர்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/anganwadi ts1-zjthr.jpg)
கடந்த ஆண்டு கூட ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகுதான் சீருடைகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க கிடைக்கவில்லை என தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் தெரிவித்தது.
English Summary
kids from anganwadi across tamilnadu did not receive dresses