கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2023 பிப்ரவரி மாதம் திறப்பு - அமைச்சர் முத்துசாமி - Seithipunal
Seithipunal


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2023 பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 400 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. இங்கு, 40 ஏக்கர் பரப்பளவில் இதற்கான கட்டுமான பணிகள், 2019ல் துவங்கின. 

இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.

தொடர்ந்து கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்ற நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், 2023 பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kilambakkam Bus Station opens in February 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->