குவைத் மன்னர் மறைவு: அரைக்கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி! - Seithipunal
Seithipunal


குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா உடல்நலம் சரியில்லாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்து விட்டார். 

இவரது மறைவிற்கு அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்திருந்தது. 

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்களும் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குவைத் மன்னரின் மறைவை ஒட்டி துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மேலும் குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

king of Kuwait death national flag flown half mast


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->