#Breaking: முருக பக்தர், கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் அரசு விழாவாக சிறப்பிப்பு - தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!
Kirupanandha Variyar Birthday Celebrates Govt Festival Upcoming Year TN CM Told 9 Feb 2021
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றியை அடைந்து, ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிமுகவினர் களமிறங்கியுள்ளனர்.

அனைவராலும் திருமுருக கிருபானந்த வாரியார் என்று அழைக்கப்படும் முருக பக்தர், தினமும் ஆன்மீக ரீதியிலான சொற்பொழிவுகளை நிகழ்த்தி தவமாக வாழ்ந்தார். சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்ற பல துறைகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர். மேலும், அருள்மொழி அரசு என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில், கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இனி வரும் வருடங்களில் கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருடம் தோறும் கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் அரசு விழாவாக சிறப்பிக்கப்படும் என்றும், ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதியில் அவரது பிறந்தநாளில் அரசு விழா கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kirupanandha Variyar Birthday Celebrates Govt Festival Upcoming Year TN CM Told 9 Feb 2021