கொடைக்கானலில் கோடை சீசன் தொடக்கம்; சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு..!
Kodaikanal summer season begins tourist arrivals increase
`மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம். இது தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளுக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி, இ-பாஸ் நடைமுறை மற்றும் வாகன கட்டுப்பாடு அமலில் உள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை மிதமான அளவில் இருந்த நிலையில்,கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது.

தற்போது இங்கு இதமான கால நிலை நிலவுகிறது. வழக்கமாக வார இறுதி நாட்களில்தான் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் வார நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் மிகவும் பிரசித்தி பெற்ற கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், குணா குகை, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை அழகை பார்த்து சுற்றுலாப்பயணிகள் ரசித்து வருகின்றனர். அத்துடன், அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் திருமுறையை கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Kodaikanal summer season begins tourist arrivals increase