தஞ்சையில் ஒரு லட்சத்திற்கு ஏலம் போன அறிய மீன்.! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ரவி நேற்று இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். இரவு முழுதும் மீன்பிடித்து விட்டு இன்று காலை கரைக்கு திரும்பிய அவரது வலையில் கூரை கத்தாழை எனப்படும் அரிய வகை மீன் ஒன்று சிக்கியிருந்தது. 

25 கிலோ எடை கொண்ட இந்தக் கூரைக் கத்தாழை மீனில் உள்ள நெட்டி மருத்துவ குணம் கொண்டதாகவும் ஆண்மை குறைவு உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தக் கூடியதாகவும் அத்தோடு விலை உயர்ந்த ஒயின் தயாரிக்க இதனை பயன்படுத்துவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரவி அதிராம்பட்டினம் பெரிய மார்க்கெட்டுக்கு அந்த மீனை கொண்டு சென்று ஏலம் விட்டுள்ளார். அங்கு இருந்த வியாபாரிகள் அந்த மீனை போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுக்கத் துவங்கிய நிலையில் இறுதியில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் மீனவர் ரவி மகிழ்ச்சி அடைந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

koorai kaththalai fish in adirampattinam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->