கோவை || கதவை திறந்து போட்டு காத்து வாங்கிய கல்லூரி மாணவர்கள்.! நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில், கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று காத்துவரவில்லை என்று, கல்லூரி மாணவர்கள் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி உள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திறந்துகிடந்த  அறைக்குள் சென்று, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஸ்மார்ட்போன்களை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவங்கள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், செல்போன் சிக்னல் வைத்து கேரளாவை சேர்ந்த கிரீஸ் என்பவனை கைது செய்துள்ளனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில், இவர் கோவையில் கிடைக்கும் வேலையை பார்த்துகொண்டு, கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி தங்கியிருப்பதை நோட்டமிட்டு, அந்த அறைகளில் செல்போன் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai night time smart phone thief arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->