கோவை || மீண்டும் கைதாக போகும் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி! - Seithipunal
Seithipunal


பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு!

இந்து மதம் பற்றி தவறாக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து தமிழக முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களில் நடத்தினர். 

இதன் ஒரு பதவி பகுதியாக கோவை இந்து முன்னணியினர் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆ.ராசாவை பற்றி இழிவான வார்த்தைகளால் பேசி இருந்தார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி பாலாஜி உத்தம ராமசாமி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்பொழுது ஏராளமான பாஜக தொண்டர்கள் கோவை சிறைச்சாலை முன்பு கூறினர். அதன் காரணமாக இன்று அனுமதியின்றி கோவை மத்திய சிறைசாலை முன்பு கூட்டத்தை கூட்டியது தொடர்பாக பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 7 பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனால் பாலாஜி உத்தம ராமசாமி மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai police files the One more case against BJP leader


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->