#கோவை || 21 லட்சம் பணம், 22 பவுன் தங்க நகைகளுடன் தப்பி ஓடிய சிறுவர்கள்.! சொந்த வீட்டில் கைவைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோவை அருகே இருபத்தி ஒரு லட்சம் ரொக்கப் பணம், 22 பவுன் தங்க நகைகளுடன் சிறுவர்கள் மாயமானது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம், போத்தனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த சிறுவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் கடந்த 30ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் விளையாடிக் கொண்டிருந்தனர். அதன்பின்னர் இருவரையும் திடீரென காணவில்லை. இதனால் இருவரின் பெற்றோர்களும் சுற்றி முற்றி அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர்.

எங்கு தேடியும் சிறுவர்கள் இருவரையும் காணவில்லை. இதற்கிடையே அந்த 14 வயது சிறுவனின் தந்தை தன் வீட்டு வீட்டுக்கு சென்று, பீரோவை திறந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 21 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 22 பவுன் தங்க நகைகள் காணவில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

இதனை அடுத்து இந்த சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியான முதல்கட்ட தகவலின்படி இந்த இரண்டு சிறுவர்களும் இணைந்து வீட்டை விட்டு வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சிறுவர்கள் தான் இந்த தங்க நகைகளையும், பணத்தையும் எடுத்து சென்று உள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai two school boys escaped


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->