வரும் மே 5ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை.. காரணம் என்ன.?
Koyambedu market closed on May 5
வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டத்தில் வணிகர் உரிமை முழக்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் விக்ரம ராஜா தலைமை தாங்குகிறார். மேலும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் மே 5ம் தேதி ஈரோடு வணிகர் தின மாநாடு நடக்க இருப்பதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படும் என கோயம்பேடு காய்கறி மார்க்கெட் அனைத்து கூட்டமைப்பு சங்கத் தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். ஆனால் பூ மற்றும் பழ மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அன்றைய தினம் அனைத்து கடைகளையும் மூடி விட்டால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு சிரமப்படுவார்கள் என்றும் பூ மற்றும் பழ விலை அதிகரிக்க கூடும் என்பதாலும் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Koyambedu market closed on May 5