கோவை சூப்பர் மார்க்கெட்டில் திடீரெனத் தீ விபத்து!!!
Sudden fire accident in Coimbatore supermarket
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சக்கணக்கான பொருட்கள் நாசமாயின.
கோவையில் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள பாலாஜி சூப்பர் மார்க்கெட்டில் நேற்று நள்ளிரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயினை கட்டுக்குள் வைத்தனர்.
இந்நிலையில் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாயின. பல லட்சம் ரூபாய் பொருட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தத் தீ விபத்தானது சூப்பர் மார்க்கெட்டில் உள்ள மின்சாரகசிவு மூலம் ஏற்பட்டிருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sudden fire accident in Coimbatore supermarket