"கிருஷ்ணகிரியை அதிர வைத்த சம்பவம்" - தனிப்பிரிவில் பணியாற்றிய 30 காவலர்கள் பணியிட மாற்றம்..!!
Krishnagiri special unit 30 policemen transferred
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசுந்தரம் கிராமத்தில் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி வழங்க கோரி கடந்த வாரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல் போராட்டம் கலவரமாக மாறியதில் 15க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். மேலும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், தனியார் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பலத்தை சேதாரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்திற்கு காரணமான இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்கள்.
இந்த நிலையில் கலவரம் சம்பவம் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் கீழ் செயல்படும் தனிப்பிரிவு போலீசார் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் கீழ் பணியாற்றி வந்த 30 காவலர்களை பணியிட மாற்றம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Krishnagiri special unit 30 policemen transferred