லேட்டாக வந்த மகள் கண்டித்த தாய்.. கடுப்பான மகள் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ளஓசூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.

இத்தகைய நிலையில், வேலை முடிந்து இரவு நேரத்தில் தாமதமாக வீட்டிற்கு வந்த சித்ராவை அவரது தாயார் கலா கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சித்ரா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சித்ராவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri women got suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->