செந்தில் பாலாஜி குற்றவாளி இல்லை! அண்ணாமலையை அட்டாக் செய்த அழகிரி!  - Seithipunal
Seithipunal


 

செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டும் அளவுக்கு பாஜகவினர் ஒன்றும் நேர்மையானவர்கள் இல்லை. அவர்களின் அமைச்சர்கள் 33 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே எஸ் அழகிரி, நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "கடந்த 9 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் தமிழகத்தில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை. 

ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை ஒட்டுமொத்தமாக இந்த பாஜக அரசு புறக்கணித்து வருகிறது. 

எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி மொரிசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. 

இப்படி நாகரிகம், பண்பாடு எதுவும் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத வரை அவர் குற்றவாளி இல்லை.

இதே போல 33 மத்திய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. செந்தில் பாலாஜி குற்றம் சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் இல்லை" என்று என்று கே எஸ் அழகிரி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KS Alagiri Say About Senthilbalaji case And BJP Annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->