கூடங்குளம் அணுமின் நிலைய ரஷ்ய விஞ்ஞானி காலமானார்.!
Kudankulam Nuclear Plant scientist from Russia dies
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் கட்டமைப்பு தலைவராக பணியாற்றி வந்த ரஷ்யா விஞ்ஞானி கிளினின் கோ-வாடின் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திங்கள்கிழமை மாலை கூடங்குளம் டவுன்ஷிப்பில் இருந்தபோது ரஷ்ய விஞ்ஞானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 10.15 மணியளவில் தனது 61வது வயதில் ரஷ்யா விஞ்ஞானி கிளினின் கோ-வாடின் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் தூதரகம் மூலம் ரஷ்யா கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
English Summary
Kudankulam Nuclear Plant scientist from Russia dies