குவைத் தீ விபத்து : உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்ககளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் - செஞ்சி மஸ்தான்!! - Seithipunal
Seithipunal


குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் கொச்சி வந்தடைந்ததும் 7 தனித்தனி வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.

குவைத் நாட்டில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் ஆறு மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்டதால், தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும், 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த 41 பேர்களில் 2 தமிழர்களும் உள்ளனர். அவர்களின் உடலை தமிழகம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், குவைத் தீ விபத்தில் தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு அயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு சார்பில் உயிரிழந்து இந்தியர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக தகவல் வெளியாகிவுள்ளது. காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50000 வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், குவைத் நாட்டில் நான்கு மாடி கட்டிடத்தில் 195 தொழிலாளிகள் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், நேற்றைக்கு நடந்த திடீர் தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைப்படி, அயலக அணி சார்பாக தூதரகத்துடன் உதவியோடு தீ காயங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளிகளுக்கு அங்குள்ள தமிழ் சங்கங்கள் இணைந்து உதவிகள் செய்ய வேண்டும்.

இறந்தவர்களில் யார் யார் தமிழர்கள் என்று அடையாளம் கண்டு உடலை உறவினர்களிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைப்படி, துறை சார்ந்த அதிகாரிகள் அந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் கொச்சி வந்தடைந்ததும் 7 தனித்தனி வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuwait Fire accident 7 tamil people dead bodys send home town gingee Masthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->