குவைத் தீ விபத்து : 43 பேரின் உயிரிழப்புக்கு இரங்கல் ! இரு தமிழர்கள் உடலை ஊருக்கு கொண்டுவர வழி செய்க - மருத்துவர் ராமதாஸ்!! - Seithipunal
Seithipunal


குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் உள்ள  கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் தமிழர்கள் இரண்டு பேர் இறந்து உள்ளதாக கூறப்படுகிறது.

குவைத் தீ விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 43 பேரின் உயிரிழந்த செய்தி இந்திய முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், குவைத் தீ விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 43 பேரின் உயிரிழப்புக்கு இரங்கல்: உடல்களை சொந்த ஊர் கொண்டு வரவும், இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிவுள்ளதாவது :-

குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் உள்ள  கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும்  வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களில்  இரு தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் இந்தியர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் உள்ளிட்ட உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குவைத்  தீ விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையாக உடல்நலம் பெற எனது விருப்பத்தைத்  தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த  தொழிலாளர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரவும், அவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuwait fire accident Condolences for the loss of 43 people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->