ஓடும் பேருந்தில் நர்சுக்கு தொல்லை.! கூலித்தொழிலாளி கைது...! - Seithipunal
Seithipunal


ஓடும் பேருந்தில் நர்சுக்கு தொல்லை கொடுக்க கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இளம்பெண், மீண்டும் கோவைக்கு தனியார் சொகுசு பேருந்தில் சென்றார். அப்பொழுது இவரது இருக்கைக்குப்பின் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் புகை பிடித்துள்ளார்.

இதையடுத்து, இளம்பெண் இது குறித்து பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் அந்த வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் பேருந்தில் இருந்து கீழே இறங்க முயன்ற இளம்பெண் கையை பிடித்து இழுத்து தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டு ள்ளார்.

இதைத்தொடர்ந்து சக பயணிகள் உதவியுடன் இளம்பெண் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியே சேர்ந்த முருகன்(36) என்பதும், அவர் கூலி தொழிலாளியாக கோவையில் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து முருகனை கைது செய்த போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer arrested for harassing nurse in moving bus in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->