காவிரி ஆற்றில் குளித்தபோது பரிதாபம்.! நீரில் மூழ்கி தொழிலாளி பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை மீராசா வீதி பகுதியில் வசித்து வந்தவர் கூலி தொழிலாளி சொக்கப்பன்(56). இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சொக்கப்பன் நேற்று முன்தினம் அருகில் உள்ள காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது அங்கு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சொக்கப்பன், ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதைப் பார்த்த அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். இதைத்தொடர்ந்து அவரது மனைவிக்கு தகவல் கொடுத்து, பின்பு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சொக்கப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து அம்மாபேட்டை போலீசார், சொக்கப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer drowned in Cauvery river in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->