தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி...! அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம்...! - Seithipunal
Seithipunal


தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் தெரசாபுரம் பகுதியை சேர்ந்தவர் கரும்பு வெட்டும் தொழிலாளி தெய்வசிகாமணி (52). இவர் தஞ்சாவூர் தங்கப்பன் உடையான்பட்டி பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக சென்றுள்ளார். அங்கு புதுச்சேரியை சேர்ந்து பெண் ஒருவரும் தனது 13 வயது மகளுடன் கரும்பு வெட்டும் வேலைக்காக வந்துள்ளார்.

இதையடுத்து கரும்பு வெட்டும் குழுவினர் அனைவரும், திருவள்ளூர், அரியலூர் போன்ற பகுதிகளுக்கும் கரும்பு வெட்ட சென்றுள்ளனர். இந்நிலையில் அரியலூரில் இருந்த போது பெண்ணின் 13 வயது மகளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது சிறுமியை பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அப்பொழுது மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சு ஆதார் அட்டை பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு 13 வயதுதான் ஆனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், தஞ்சையில் இருந்தபோது கரும்பு வெட்டும் தொழிலாளியான தெய்வசிகாமணி தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், இதனால் சிறுமி கர்ப்பமானதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தஞ்சை அடுத்த வல்லம் மகளிர் போலீசார் தெய்வசிகாமணியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெய்வசிகாமணிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer sentenced to 25 years for Jail 13 year old girl in Thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->