வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தொழிலாளி..! சிறை தண்டனை விதித்த ஈரோடு நீதிமன்றம்...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த பெண்ணோடு வசித்து வந்தார். மேலும் அந்தப் பெண்ணின் 15 வயதான இரண்டாவது மகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மதுபாட்டிலை வீட்டிற்கு வாங்கி வந்த தொழிலாளி சிறுமி மற்றும் அவரது தாய்க்கு ஊற்றி கொடுத்துகட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் தூங்கியதும், வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மது வாங்கி வந்து, சிறுமியை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமி இது குறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 7000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் 1.50 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer who raped adopted daughter gets 5 years jail in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->