பதவியை ராஜினாமா செய்கிறேன் - முதல்வருக்கு கடிதம் எழுதிய திருச்சி எம்.எல்.ஏ.! - Seithipunal
Seithipunal


பதவியை ராஜினாமா செய்கிறேன் - முதல்வருக்கு கடிதம் எழுதிய திருச்சி எம்.எல்.ஏ.!

திருச்சி மாவட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதி வளர்ச்சி பணிகள், உள்ளாட்சி மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும், அமைச்சர் நேரு தரப்பிலான சில நபர்கள் கவனித்து வருகின்றனர். ஆனால், அமைச்சர் நேருவுக்கு எதிராக, துறையூர், முசிறி, லால்குடி, மணச்சநல்லுார், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் இருந்து வருகின்றனர்.  

இந்த நிலையில், அமைச்சர் நேரு சுதந்திர தினத்தை முன்னிட்டு லால்குடி தொகுதியில், அரசு திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை அத்தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் புறக்கணித்து, முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தன் தொகுதியில் நிறைவேற்றிய மற்றும் நிறைவேற்றப்பட உள்ள 'டெண்டர்' பணிகளின் கமிஷன் விவகாரம், சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் நிறுவனங்கள் பெயர் மற்றும் தொகை உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டு, அமைச்சர் நேரு மகன் அருணின் செயல்பாடுகளையும் புகாராக தெரிவித்துள்ளார். 

மேலும், இனி தனக்கு எம்.எல்.ஏ. பதவி வேண்டாம் என்றும், இதையே ராஜினாமா கடிதமாக எடுத்துக் கொள்ளுமாறும், எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை படித்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் நேருவை அழைத்து, எம்.எல்.ஏ.க்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு உத்தரவிட்டிருக்கிறார். 

அந்தத் உத்தரவின் படி, அமைச்சர் நேரு நேற்று முன்தினம் அவசர அவசரமாக திருச்சி சென்று நேற்று காலை திருச்சி அறிவாலயத்தில் அதிருப்தியில் உள்ள ஐந்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட அரசு உயர் அதிகாரிகளை அழைத்து, எம்.எல்.ஏ.க்கள் சொல்லும் பணிகளை உடனடியாக செய்து கொடுக்கவும், டெண்டர்களை அவர்களுக்கே கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், அமைச்சர் நேரு மீது அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏக்கள் தற்போதைக்கு சமாதானம் அடைந்துள்ளார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lalkudi MLA write letter to cm mk stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->