#தமிழகபட்ஜெட்2023 | சொத்து பத்திரப்பதிவுக்கான கட்டண விகிதம் அதிரடி குறைப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் தொடங்கியது. சில நாட்கள் நடைபெற்ற இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதன் பின்னர் தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மார்ச் 20ஆம் தேதியான இன்று தமிழக சட்டப்பேரவையில் காலை 10 மணி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த 2023 பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்ட பின்னர், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023 பட்ஜெட்டை படிக்க துவங்கி தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில், "இதுவரை நிலம் பத்திரபதிவு செய்யவதற்கான கட்டண வரி விகிதம் 4 சதவீதமாக இருந்து நிலையில் தற்போது அதனை 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது." என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பட்ஜெட் 2023 அறிவிப்புகளில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

land registration fees decreased in 2023 budget


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->