ஆளுநர் மாளிகை - பெட்ரோல் குண்டு! குற்றவாளியின் பின்னணியில் பாஜக புள்ளி - தமிழக அரசு தரப்பு பகீர்!
Law Minister say about petrol bomb
சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், பாஜக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன், தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜகவினரின் சதித்திட்டம் உள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில், "ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத்தை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது.
இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
English Summary
Law Minister say about petrol bomb