சவுக்கு சங்கரின்‌ உயிருக்கு ஆபத்து.. பகீர் கிளம்பிய வக்கீல்.. நீதிபதியிடம் அவசர கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


காவல்துறை உயர் அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக கோவை மாவட்ட சைபர் ட்ரைன் போலீசார் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவர் தற்போது கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கரை சந்தித்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக நீதிபதியிடம் கோரிக்கை மனு அளித்த பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது "சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பும் சிறையில் அடைப்பதற்கு முன்பும் இரண்டு முறை முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

அப்போது அவர் உடலில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தற்போது அவர் கடுமையாக தாக்கப்பட்டு கைகளில் முடிவு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் ரத்தக் கட்டுகள் ஏற்பட்டுள்ளன. கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கரை அடைத்ததும் பத்துக்கும் மேற்பட்ட சிறைக் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கண்ணைக் கட்டி விட்டு பிளாஸ்டிக் மத்தியில் துணியை சுற்றி விட்டு தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் தெரிவித்துள்ளார். 

கைகள் உடைந்து விடக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி அடைத்துள்ளனர். ஆனால் அடி பலமாக விழுந்ததால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீக்கத்தை குறைப்பதற்காக ஆயில்மெண்ட் போட்டு வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்துள்ளனர். அதிக வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரது கிட்னி பாதிக்கப்படக்கூடும். 

வழக்கறிஞர்கள் குழுவினரின் இன்று சர்க்கரை சந்திக்காமல் இருந்திருந்தால் அவர் வழக்கு விழுந்ததாகவோ, வேறு காரணங்களுக்காகவோ சவுக்கு சங்கர் சிறையில் காயம் பட்டுள்ளார் என்ற அறிக்கை வெளியாகி இருக்கும். 

இது தொடர்பாக நீதிபதியின் சந்தித்து கோவை மத்திய சிறையில் அப்பட்டமான மனித உரிமைகள் நடைபெற்ற வருவது, சவுக்கு சங்கரை சிறை வளாகத்தில் உள்ள மனநல பாதிக்கப்பட்டோர் தனி பிரிவில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வது தொடர்பாக மனு அளித்துள்ளோம். சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது குறித்து சக கைதி ஒருவரே சாட்சியும் அளிப்பார். 

சவுக்கு சங்கருக்கு கோவை சிறையில் ஆபத்து உள்ளது நீதிபதி நேரில் சென்று கல ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். சவுக்கு சங்கரன் உடல் பரிசோதனை செய்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும்" கோரிக்கை வைத்துள்ளார். பிரபல அரசியல் விமர்சக சவுக்கு சங்கர் மத்திய சிறையில் தாக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lawyer accuses Savukku Shankar life in danger


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->