நகராட்சி ஆணையருடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா சந்திப்பு..வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை! !
Leader of Opposition Siva meets Municipal Commissioner Talk about development!
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா சந்தித்து பேசினார்.அப்போது கொம்பாக்கம் வார்டு பகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி அவர்களை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.அப்போது, வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுச்சேரி நகராட்சியின் கடைசி வார்டு கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட கொம்பாக்கம் பேட், குப்பம் பேட் பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சுடுகாடு கொட்டகை, தகன மேடை மற்றும் மதில் சுவர் அமைத்தல், கொம்பாக்கம், குப்பம் பேட் பகுதியில் பொதுக்கழிப்பிடம் திறத்தல் போன்ற பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்,
மேலும் புதுநகர் அண்ணா நகர், பாலாஜி நகர், அமிர்தம்மாள் நகர், சதாம் உசேன் நகர், திருப்பதி பாலாஜி நகர், ஸ்ருதி கார்டன் மற்றும் பாப்பாஞ்சாவடி வள்ளலார் நகர், புஷ்ப காந்தி நகர், செங்கேணி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், செட்டிக்களம் துர்கா நகர் முதல் மற்றும் நான்காம் குறுத்துக் தெருக்களில் நடைபெறும் சாலை பணியை விரைவாக முடிப்பது, ஒட்டம்பாளையம், கொம்பாக்கம் சுடுகாட்டிற்கு மதில் சுவர் அமைத்து தர வேண்டும். புதிய குப்பைத் தொட்டிகள் அமைத்து, தீவிர துப்புரவு பணியை மேற்கொள்ள வேண்டும், ஒட்டம்பாளையம் வழியாக அரியாங்குப்பம் செல்ல சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சிறு பாலம் அமைத்தல், புதியதாக மனைப்பிரிவு அமைக்கப்பட்ட பகுதிகளில் மழை காலத்திற்குள் மண் சாலை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
English Summary
Leader of Opposition Siva meets Municipal Commissioner Talk about development!