பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு - சீமானை வெளுத்து வாங்கும் தலைவர்கள்.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என கூறியவர் பெரியார்" என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவெளியில்,பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசிய விவகாரம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது:- "பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதற்கு ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆதாரத்தை வழங்கவில்லை என்றால் நாளை காலை 10 மணிக்கு சீமான் வீட்டிற்கு நேரில் செல்வேன்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leaders condems seeman speech about periyar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->