ராமர் கோவில் குடமுழக்கு - காமாட்சி அம்மன் கோவிலில் எல்இடி திரை திடீர் அகற்றம்.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்து வருகிறது.  இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும், ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்தை எல்இடி திரையில் பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

இத்தகைய சூழ்நிலையில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரை காவலர்களின் உத்தரவுப்படி நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LED secreen remove in kanchipuram kamatchi amman temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->