இந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசிய லியோனி..! - Seithipunal
Seithipunal


இந்துக்கள் மனம் காயப்படும்படி சர்ச்சையாக பேசிய தி.மு.க. பேச்சாளர் லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் பாரத் ஹிந்து முன்னணி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதுக்குறித்து  இந்த அமைப்பின் மாநில செயலாளரான டில்லி பாபு நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரில்,

சென்னை கலைவாணர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் அறுபதாவது பிறந்த நாள் விழா நடந்தது. அதில் லியோனி கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது அவர் ஹிந்துக்கள் யாகம் வளர்க்கும் முறைபற்றியும், கல்லையும் கடவுளாக வணங்குவது குறித்தும் அவதுாறாக பேசியுள்ளார்.

ஹிந்துக்களின் யாகம் மிகவும் புனிதமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் ஹிந்துக்கள் கருதுகின்றனர்; கல்லையும் கடவுளாக வணங்கும் ஒரே மதம் ஹிந்து மதம்.

எனவே ஹிந்துக்களின் மனதை மிகவும் அசிங்கப்படுத்தி கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ள லியோனி மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தற்போது பதவி வகித்து வரும் பாடநுால்கழக தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leoni insulted Hinduism..!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->