அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் இடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது.

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் மாநகராட்சி ,நகராட்சி பகுதிகளில் 30க்கும் குறைவான ,ஊரக பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்றலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் 600க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலுவதாக செய்தி வெளியான நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Less than students in class students change school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->