திண்டிவனம் அருகே பரபரப்பு: அம்மா உணவக சாப்பாடு தட்டில் கிடந்த பல்லி.! - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அருகே அம்மா உணவக சாப்பாடு தட்டில் பல்லி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே செஞ்சி சாலையில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை அம்மா உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக பொதுமக்கள் வந்துள்ளனர்.

அப்பொழுது அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் தட்டில் பல்லி இருந்துள்ளது. இதை பார்த்த அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சடைந்தனர். இதையடுத்து உடனே அம்மா உணவகத்தில் இருந்த அனைத்து சாப்பாடுகளையும் அப்புறப்படுத்தினர். 

மேலும் முன்னெச்சரிக்கையாக தட்டில் பல்லியை பார்த்தவர் உள்பட அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 10 பேர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அம்மா உணவகத்திற்கு சாப்பிட வந்த அனைவருக்கும் அதிர்ச்சியையும், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lizard lying on the food plate of Amma restaurant near Tindivanam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->