தஞ்சாவூருக்கு ஜன.11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 176வது ஆராதனை விழா இன்று மாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்க உள்ளது. இந்த விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆராதனை விழா வரும் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொள்ள உள்ளார். வரும் ஜனவரி 11ஆம் தேதி காலை 8 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சியுடன் தொடங்கி காலை 9 மணி அளவில் ஆராதனை விழா பந்தலில் 500 க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்ச ரத்தின கீர்த்தனைகளை பாடி தியாகராஜ சுவாமிகளை வழிபட உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து இரவு 10:30 மணி அளவில் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடைகிறது. இந்த நிலையில் தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் வகையில் வேறு ஒரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் எனவும், அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Local holiday for Thanjavur districr on 11th Jan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->