கன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு விடுமுறை மட்டுமல்லாமல் பிரபல வீரர்களின் பிறந்த நாள், பிரசித்திபெற்ற கோவில்களின் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-

"ஆன்மிகத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகின்ற செப்டம்பர் மாதம் (14.09.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மூன்று வட்டங்களில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local holiday to three taluka in kanniyakumari district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->