மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகள் : 20 நாட்களுக்குப் பிறகு குட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மரகண்ட ஹள்ளி கிராமத்தை அடுத்த கவுண்டன்பாறை கொட்டாய் கிராமத்தில் கடந்த ஏழாம் தேதி இரண்டு குட்டியானைகள் உள்பட மொத்தம் ஐந்து யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளனர்.

அப்போது அந்த விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது. தாய் யானை உயிரிழந்ததை அறியாத 2 குட்டிகள் அங்கேயே சுற்றி வந்தன.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் யானைகள் உயிரிழந்தது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி வனத்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த யானைகளை மீட்டுச் சென்றனர். பின்னர் தாயை பிரிந்து சென்ற இரண்டு குட்டிகளையும் வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், வனத்துறையினர் தாயை பிரிந்த இரண்டு குட்டிகளும் தருமபுரி - கிருஷ்ணகிரி எல்லையில் உள்ள பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் ஆரோக்கியமாக சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு யானைகளும் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

location found of two elephant cubs in dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->