#BigBreaking | தருமபுரி தொகுதியில் பாமகவுக்கு அதிர்ச்சி! கடைசி 4 சுற்றுகளில் நடந்தது என்ன?! - Seithipunal
Seithipunal


18-வது மக்களவைத் தேர்தலையில் பாட்டாளி மக்கள் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பத்து தொகுதிகள் பெற்றது. காஞ்சிபுரம், தர்மபுரி, மயிலாடுதுறை, சேலம், அரக்கோணம், ஆரணி,விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் என பத்து நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பாக பசுமைத் தாயகத்தின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி போட்டியிட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் எண்ணிக்கையில் ல் முதல் சுற்று முதலே பாமகவின் நட்சத்திர வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை பெற்றுவந்தார்.

16 வது  சுற்றுக்கு பின்னர் சௌமியா அன்புமணியை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றார். 

இந்த நிலையில், இறுதி சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் மணி 3,81,837 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை விட 18 ஆயிரத்து 524 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

மூன்றாவது இடத்தில் அதிமுக வேட்பாளரும், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Election 2024 Dharmapuri PMK loss


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->