ஆரம்பமே அசத்தல்! திமுக, பாஜக முன்னிலை! - Seithipunal
Seithipunal



உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்தியாவின் பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 

96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களை அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

543 தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக போட்டியின்றி வென்ற நிலையில், மீதம் உள்ள 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.  பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

முதலக்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து EVM எந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

இந்நிலையில், தற்போது வரை 542 தொகுதிகளில் 341 தொகுதிகள் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பாஜக 205 இடங்களிலும், காங்கிரஸ் 124 இடங்களிலும், மற்ற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக 7 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Election 2024 leading Result 844


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->