நெருங்கும் மக்களவை தேர்தல்: தமிழகத்தில் டாஸ்டாக் கடைகள் மூட உத்தரவு.!
Lok Sabha elections TN Tasmac shops close order
மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் கட்டமாக தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
மேலும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/electioncm-4xd7v.gif)
இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை மது கடைகள் திறக்கப்படக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் நான்காம் தேதி அன்று மது கடைகள் மூட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Lok Sabha elections TN Tasmac shops close order