வாழ்க மே தினம் ! வெல்க தொழிலாளர் ஒற்றுமை ..எதிர்க்கட்சித் தலைவர் சிவா மே தின வாழ்த்து!
Long live May Day Welcome Workers Solidarity Leader of Opposition Siva greets people on May Day
புதுச்சேரியில் தொழிலாளர் துயர் துடைக்கவும், வேலைவாய்ப்பு பெருகவும் ஆட்சி மாற்றம் அவசியம். அது மட்டுமே தீர்வு அளிக்கும் என்ற அந்த உறுதிப்பாட்டோடு இந்த மே தினத்தை எதிர்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி அரசு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,இரா. சிவா, எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:மே–1–ஆம் நாள் உழைக்கும் மக்களின் நாளாக – தொழிலாளர் தினமாக உலகமெலாம் கொண்டாடப்படுகிறது. 19–ஆம் நூற்றாண்டில் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்தெழுந்து 8 மணி வேலை நேரத்திற்கு முழக்கமிட்டு அரசின் அடக்குமுறையை சந்தித்து சரித்திரம் படைத்த அந்நாளை இன்று வரை தொழிலாளர்களின் உரிமை நாளாக – கொண்டாட்ட நாளாக முன்னெடுத்து வருகிறோம். இதுவரை தொழிலாளர் வர்க்கம் தனது போராட்டம் மூலம் பெற்ற உரிமைகளை நினைத்துப் பார்த்து, அந்த உரிமைகள் பறிபோகாமல் காப்பற்றப்படவும், மேலும் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவுமான உறுதிமொழியை ஏற்கும் நாள். இப்படிப்பட்ட நன்நாளில் புதுச்சேரி மாநில அனைத்து வகைத் தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தி.மு.கழகம் மகிழ்ச்சி அடைகிறது.
கடந்த பத்தாண்டு பாஜக அரசில் தொழிலாளர் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க்கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களை கொழுக்க வைக்க தொழிலாளர்களை காவு கொடுத்து வருகிறது பாஜக அரசு. அதே வழியில் புதுச்சேரியில் பாஜக– என்.ஆர்.காங்கிரஸ் அரசு ஆட்சியில் பல சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து பட்டினி கிடக்கின்றனர். பஞ்சாலைகள், கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்கும் ‘நலவாரியம்’ இன்னும் இழுபறியில் உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி கூட பெறமுடியாத அவலம் நீடிக்கிறது. கடந்த நான்காண்டு ஆட்சியில் ஒரு தொழிற்சாலை கூட புதுச்சேரி மண்ணில் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் தினம் ஒரு தொழிற்சாலை துவங்குவதால் இளைஞர்கள் பெருமளவில் வேலைபெறும் வாய்ப்பு உருவாகி வருகிறது.
ஆகவே, புதுச்சேரியில் தொழிலாளர் துயர் துடைக்கவும், வேலைவாய்ப்பு பெருகவும் ஆட்சி மாற்றம் அவசியம். அது மட்டுமே தீர்வு அளிக்கும் என்ற அந்த உறுதிப்பாட்டோடு இந்த மே தினத்தை எதிர்கொள்வோம். வாழ்க மே தினம் ! வெல்க தொழிலாளர் ஒற்றுமை என எதிர்க்கட்சித் தலைவர் சிவா மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்!.
English Summary
Long live May Day Welcome Workers Solidarity Leader of Opposition Siva greets people on May Day