ஆவேசம்!!!அக்கறையில்லா திமுக!!! பாரதியார் பிறந்த வீட்டை திமுக எப்படி வச்சிருக்குது பாருங்க? - அண்ணாமலை
Look how DMK has maintained house where Bharathiyar was born Annamalai
மகாகவி பாரதியார் வீடு பற்றி ,பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது," தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், மகாகவி பாரதியார் பிறந்த வீடு, முறையான பராமரிப்பு இல்லாமல் இடிந்திருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 அன்று, என் மண் என் மக்கள் பயணத்தின்போது, மகாகவி பிறந்த இல்லத்தைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
மகாகவியின் புரட்சி வேள்வியின் கனலை அந்த இல்லத்தில் இன்னும் உணர முடிகிறது.அத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தைப் பராமரிக்காமல், இடிந்து விழும் அளவுக்குக் கொண்டு சென்றிருக்கும் தி.மு.க. அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்துக்குச் சம்பந்தமே இல்லாதவர்களுக்கெல்லாம் சிலை வைக்க பல நூறு கோடிகள் வீணாகச் செலவிடும்போது, தமிழ் மொழியின் அடையாளங்களில் ஒருவராகிய மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தைப் பராமரிக்க தி.மு.க. அரசுக்கு மனமில்லையா? " எனத் தெரிவித்திருந்தார்.
இது தற்போது பூகம்பமாக அரசியல்வாதிகளிடையே கிளம்பியுள்ளது.
English Summary
Look how DMK has maintained house where Bharathiyar was born Annamalai