இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி...  காவல் உதவி ஆய்வாளர் பரிதாப பலி.!  - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை, தென் கடம்பன்தாங்கல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பிச்சாண்டி (வயது 59). இவர் இருசக்கர வாகனத்தில் இன்று காலை தென் கடமந்தாங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கண்டைனர் லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பிச்சாண்டி தூக்கி வீசப்பட்ட நிலையில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry collided two wheeler Police Assistant Inspector died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->