பந்தயத்தில் தோல்வி - நடுரோட்டில் மொட்டை பாஜக நிர்வாகி!!
Losing the race a bald BJP executive in the middle
மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார். அண்ணாமலை வெற்றி பெற வில்லை என்றால் நடுரோட்டில் மொட்டை அடிப்பதாக பந்தயம் . கோவை தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் பந்தயத்தில் தோற்ற பாஜக நிர்வாகி நடுரோட்டில் மொட்டை அடித்து வாக்கை காப்பாற்றினார்.
திருச்செந்தூர் அருகே உள்ள முந்திரித்தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நண்பர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவ்வாறு அப்படி வெற்றி பெறவில்லை என்றால் பரமன்குறிச்சி பஜாரில் மொட்டை போட்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன் என சவால் விட்டுள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி உள்ளது.இண்டியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை 17 இடங்களை வென்றுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் பாஜக பிரமுகர் ஜெய்சங்கர் இன்று பரமன்குறிச்சி பஜாரில் மொட்டையடித்து கொண்டார். பின்னர் ரவுண்டானாவை சுற்றி வந்தார். இதை அங்கு நின்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.
English Summary
Losing the race a bald BJP executive in the middle