பஞ்சு விலை அதிகரிப்பால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை.! தொழிலாளர்கள் வேதனை.! - Seithipunal
Seithipunal


பஞ்சு விலை தொடர் அதிகரிப்பால் நூற்பாலைகள் மூடும் அபாயம். இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்று தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே பஞ்சு தட்டுப்பாடு காரணமாக விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நுாற்பாலைகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேடசந்தூர் மிக வறட்சியான பகுதி என்பதால் அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பை பெருக்க நுாற்பாலை பணிகளைத் தொடங்க அரசு மானியம் வழங்கியது.

தற்போது வேடசந்தூர், வடமதுரை, டி கூடலூரில் 60க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருவதால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களாக பஞ்சின் விலை உயர்வு மற்றும் பஞ்சு வரத்து குறைவால் நூற்பாலைகள் முழுமையாக இயங்காமல் தவித்து வருகின்றன.

மேலும் தட்டுப்பாட்டால் மூன்று ஷிப்ட இயங்கும் இடத்தில் ஒரு ஷிப்ட் மற்றும் 600 பேரில் 200 பேருக்கு மட்டும் வேலை இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இதே நிலை நீடித்தால் உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பஞ்சு பதுக்குதலை தடுத்தல் மற்றும் பஞ்சின் மீதான இறக்குமதிக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Loss of employment due to rise of cotton prices


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->