தாமரை சின்னம் குறித்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.!
Lotus symbol case High Court verdict today
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும் அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான காந்தியவாதி ரமேஷ் தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும் நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவு படுத்துவதும் என தெரிவித்து பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவில் பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய கோரி கலந்து 2023 செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அழைக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எழுதப்படவில்லை.
எனது மனுவை பரிசீலித்து பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில்,
தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளனர். மேலும் தாமரை ஒரு மாதத்தின் முக்கிய அடையாளம் என்பதால் பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்கு சமம் என தெவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் மனு மீதான தீர்ப்பை தடை வைத்தனர். இந்நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பு இன்று காலை 10:30 மணி அளவில் வழங்கப்பட உள்ளது.
English Summary
Lotus symbol case High Court verdict today