சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வினோத திருமணம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வினோத திருமணம் - நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே மாட்டையாமப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது, இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த பட்டதாரியான விமலா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர காதலை கைவிடும்படி கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனால், கிருஷ்ணன் விமலாவை திருவண்ணாமலை கோயிலுக்கு அழைத்து சென்று தாலிகட்டி உள்ளார்.

இதற்கிடையே தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக கிருஷ்ணன் மீது விமலாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது ஒரு புறம் இருக்க புதுமணத்தம்பதிகள் தாரமங்கலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

அங்கிருந்த போலீசார் பெண்ணின் பெற்றோரை அழைத்துள்ளனர். அதன் படி சென்ற அவர்கள் மகளை பார்த்து கதறி அழுதுள்ளனர். இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் முப்பதுக்கு மேல் இருப்பதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love married couples took refuge in salem police station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->