காதலித்து கலப்பு திருமணம் செய்த பெண் விபரீத முடிவு! மருத்துவமனையை சுத்து போட்ட உறவினர்கள்!
love married woman suicide Relatives gathered hospital
ஈரோடு, குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துநகை (வயது 33) இவர் சேலம் வீரபாண்டியர் தெரு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வந்தார்.
குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சேலம் சின்ன திருப்பதி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தனர். திருமணமாகி 2 மாதங்களில் குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும் முத்துநகையின் பெற்றோர் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் முத்துநகை கடந்த 3ஆம் தேதி விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இது குறித்து அறிந்த விடுதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியபடி இருந்த முத்துநகையை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த முத்துவின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
love married woman suicide Relatives gathered hospital