காதலி பேசாத கோபத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த காதலன்.! - Seithipunal
Seithipunal


பேருந்து நிலையத்தில் காதலில் பேசாத கோபத்தில் அரசு பேருந்து கண்ணாடியை மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் திடீரென அரசு பேருந்தின் கண்ணாடியை கையால் உடைத்தார். இதில் கண்ணாடி கையில் கிழித்து காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த இளைஞர் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் நாகர்கோவிலில் உள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருவது தெரிய வந்தது.

மேலும், காதலி தன்னுடன் பேசாத கோபத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து போக்குவரத்து கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டாறு காவல் நிலைய போலீசார் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lover did not speak boy broke bus glass


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->