கோயம்பேட்டில் லூலு மாலா? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தமிழக அரசு.!
lulu mall news rumoar tamilnadu govt info
சென்னை கோயம்பேடு பேருந்து முனையம் இருந்த இடத்தில் லுலு மால் அமைய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த நிலையில், கோயம்பேட்டில் லுலு மால் அமைய உள்ளது என்பது முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தைக் காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு தரப்போவதாகப் பலரும் வதந்தி பரப்புகின்றனர். அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் தகவலை பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலாளர் சமயமூர்த்தி மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயலாகும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
lulu mall news rumoar tamilnadu govt info