செங்கல்பட்டு கள்ளச்சாராய விவகாரம்.. காத்திருப்போர் பட்டியலில் மதுராந்தகம் டி.எஸ்.பி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தையே உலுக்கிய கலாச்சாராய வலி எண்ணிக்கை தற்பொழுது வரை 23 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பேரப்பாக்கத்தில் போலி மதுபானம் அருந்தி தற்பொழுது வரை 8 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதேபோன்று செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் செங்கல்பட்டு சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள விவகாரம் தொடர்பாக மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் திண்டுக்கல் மாவட்டம் பழனி டிஎஸ்பியாக இருந்து சிவசக்தி மதுராந்தகத்திற்கு புதிய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhurandagam DSP changed into waiting list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->