நெல்லை மாவட்டத்தில் வேகமாக பரவும் "மெட்ராஸ் ஐ"! மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்!
Madras Eye spreading fast in thirunalveli district
பருவநிலை மாற்றம் காரணமாக "மெட்ராஸ் ஐ" எனும் கண் சம்பந்தமான நோய் தற்பொழுது தமிழகத்தில் அதிகமாக பருவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே அதிகமாக நோய் பரவல் காணப்படுகிறது. இதனால் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு "மெட்ராஸ் ஐ" பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் இருந்து நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கண் பரிசோதனைக்காக தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதற்கு ஒரே காரணம் பருவநிலை மாற்ற காரணமாக "மெட்ராஸ் ஐ" நோய் பரவல் அதிகமாக காணப்படுவதே ஆகும்.
இதன் காரணமாக நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் "மெட்ராஸ் ஐ" பாதிக்கப்பட்ட மாணவர்களை கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதேபோன்று ஆசிரியர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருநெல்வேலியில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 800க்கும் மேற்பட்டோர் "மெட்ராஸ் ஐ" நோய்க்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் "மெட்ராஸ் ஐ" பாதிக்கப்பட்டுள்ளார்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் வீடுகளில் அடுத்தவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படும். எனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
English Summary
Madras Eye spreading fast in thirunalveli district