NEET Exam || வேதனையோடு நீதிபதி கொடுத்த அனுமதி... உருக்கமான பின்னணி.!! - Seithipunal
Seithipunal


இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுத போகும் மாணவி தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டதால் அவர் டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்துள்ளது. வரும் மே 5ம் தேதி நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள 19 வயது மாணவி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தீ விபத்தில் சிக்கியதால் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வின்போது டயப்பர் அணிந்திருக்கவும் தேவைப்படும்போது அதை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீட் தேர்வு எழுதவரும் மாணவிகளிடம் வரம்பு மீறிய சோதனை நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார். நீட் தேர்வுக்கான ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிய அனுமதி வழங்கியிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி இந்த வழக்கில் மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது என வேதனையுடன் நீதிபதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madrashc allowed student write neet exam with diaper


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->